என்ன செய்கிறோம்?

தெகிடி படத்தில் இறுதியில் ஒரு வசனம் வரும்.
அறிவாளியை வைத்து புத்திசாலி பிழைத்துக்கொள்கிறான்”

இந்த உலகத்தில் பொருள்முதல்வாதத்தின் பிடியில் இன்று இது தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது.
எத்தனையோ மெத்தப்படித்த,அறிவின் கூர்மையுள்ள பொறியாளர்களும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் பங்குதாரர்களின் வருங்கால இலாபத்தைப்பன்மடங்காக்கும் பொருட்டு நுகர்வோரின் தேவையற்ற தேவைகளுக்கான பயன்பாடில்லாக்கருவிகளை இரவு பகலாக உருவாக்கி வருகிறார்கள். இந்த உலகின் அனைத்து அரசுகளும் இந்த மனித அறிவு மற்றும் உழைப்பின் விரயத்தை ‘வளர்ச்சி’ எனும் பெயரில் தம் கடமை மற்றும் குறிக்கோள் மறந்து காத்து வருகின்றன.

ஐஸக் அஸிமோவும் ஆர்தர் க்ளார்க்கும் கனவு கண்ட விஞ்ஞான வளர்ச்சியை நாம் மறந்து வீண் வெட்டிக்கருவிகளைப்படைத்து அதில் ஒரு தனி நபரின் தகவல்களைச்சேமித்தும் பின் அத்தகவல்களைத்திருடி விற்கவும் அந்தத்திருட்டைத்தடுக்க பெரும் கடினத்துடன் பாதுகாப்பு அரணமைத்தும் மிகவும் பயனுள்ள மனிதமற்றும் நேரவளத்தையும் பெருமையுடன் அழித்து வருகிறோம்.இதற்குச்சற்றும் குறையாமல் இந்தப்பூமிப்பந்தின் விலை மதிப்பில்லா அடிப்படை உயிர்வளங்களையும் வேதியியல் வளங்களை மாசுபடுத்தியும் சுரண்டியும் அழித்து வருகிறோம்.

நடக்கும் ராட்சத பல்லிகளுக்குத்தங்கள் அழிவில் எந்தப்பங்கும் இல்லை.இந்த முறை நடக்கப்போகும் பேரழிவில் நமக்கு நேரடியான பங்கு இருக்கப்போகிறது என்பது ஓர் அவலச்சுவை நிறைந்த பெருமையே. இதை எழுதி முடித்துப்பின் இதைத்தவிர்க்கும் வழி ஏதேனும் உண்டா என்று எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் அதை உண்மை என்று முனையும் துணிவு என் விரல்களுக்கோ அறிவிற்கோ இல்லை. வேண்டுவதெல்லாம் சில நூறு வருடங்களில் சட்டென்று இது நிகழ்ந்து முடிந்தாலே போதும்  என்ற வரம் தான். செடிகளே! மரங்களே திமிங்கலங்களே! மீன்களே! யானைகளே! தேனீக்களே!புழுக்களே!
உங்கள் அனைவருக்கும் மானுட குலத்தின் சார்பில் என் வருத்தங்களும் நீங்கள் மன்னிக்கமாட்டீர்கள் என அறிந்து கோரும் மன்னிப்புக்கோரலும்.

Posted in கட்டுரை, thamizh, Uncategorized | Tagged , | பின்னூட்டமொன்றை இடுக

கவிப்பேரரசருக்கு முன்னாள் வாசகனின் கடிதம்

அன்புள்ள கவிப்பேரரசு அவர்களே!
அன்பு இன்னமும் காவிரிப்படுகை போல வரண்டுவிடவில்லை என்ற எதிர்பார்ப்புடன் இதை எழுதுகிறேன்.
நான் இசைஞானியை என் மானசீக குருவாகக்கொண்டவன்.
அந்த முறையில், அவர் மனதைத்தங்கள் தமிழால் சில ஆண்டுகள் ஆண்டீர்கள் என்ற முறையில்
உங்களுக்கும் உண்டு என் குரு வணக்கம்.
80களின் இறுதியில் நீங்கள் ஏவியெம் ஸ்டூடியோ படங்களுக்கு சந்திரபோஸ் இசையில் பாடல்கள்
எழுதும் போதும் உங்கள் பாடல்களையும் அதில் இருந்த பொதுவுடைமைத்தத்துவங்களுக்காகவும்,
இனிய தமிழுக்காகவும் ரசித்தவன் நான்.
‘நிலை மாறும் உலகில்
நிலைக்கும் என்ற கனவில்
வாழும் மனித ஜாதி
அதில் வாழ்வதில்லை நீதி’
இன்றளவும் என் நெஞ்சில் என்றும் ஒலிக்கும் வரிகள் இவை.
‘சந்தோஷம் காணாத வாழ்வுண்டா?
சங்கீதம் பாடாத ஆளுண்டா
ஒரு துன்பம் என்றால் அதை இன்பம்
என்று எண்ணி வாழ்ந்துவிட்டால்’
இது வசந்தி என்ற படத்தில் இடம் பெற்ற பேரழகான பாடல்.
இதற்கும் சொந்தக்காரர் நீங்கள் தான்.
80களில் சென்னைத்தொலைக்காட்சியின் கவியரங்குகளிலும்
நீங்களே கோலோச்சினீர்கள்.
இசைஞானியுடன் நீங்கள் இல்லை என்பதால் உங்கள் தமிழ்
இல்லையென்றாகிவிடாதே!
பின்னர் இசைஞானியைப்பற்றி அரசலும் புரசலுமாக நீங்கள் எத்தனையோ பேட்டி கொடுத்தீர்கள்.
அவரே பாடல் எழுதினார் என்றால் அதில் ஆயிரம் குறை சொன்னீர்கள்.
தமிழ் – திரையிசையில் வீழ்ந்துவிட்டது என அங்கலாய்த்தீர்கள்.
பிறகு உங்கள் காட்டிலும் மழை பெய்தது.
ஆனாலும் இசைஞானியை நீங்கள் விடுவதாயில்லை.
அவர் உங்களைப்புறக்கணித்தது கட்டாயக்காதல் செய்யும் விடலையின் காதல் நாடகம் புறக்கணிப்பால்
சீறுவது போல் சீறினீர்கள். வெற்றியின் மயக்கத்தில் அரசியல் அலையில் அமர்ந்து கொண்டீர்கள்.
ராஜதந்திரியான கலைஞருக்கே ராஜதந்திரி என உங்களை நினைக்க ஆரம்பித்தீர்கள்.
தொலைக்காட்சியில் கண்ணப்ப நாயனார் போலவும் பத்திரிக்கை பேட்டிகளில்
பாரதி போலவும் தோற்றமளிக்கக்கற்றுக்கொண்டீர்கள்.
இருநிலைப்பாட்டின் விளைவாகத்தமிழ் உங்களை விட்டு விலகியது.
இன்று தொலைக்காட்சியில் போலிக்கண்ணீர் வடிக்கிறீர்கள், விட்டுப்போன இசைஞானியின் படத்தை வைத்து நாடகம் அரங்கேற்றுகிறீர்கள்.
போதாதற்கு இன்று என் குருவின் குருவான ஜெயகாந்தன் கைய்யொப்பத்தை வைத்து விளம்பரம் தேடிக்கொள்ள முற்படுகிறீர்கள்.
நானும் என் குருவைப்போல ஒரு ஞானியாக இருந்தால் இதை ஒரு புன்னகையுடன் கடந்து சென்றுவிடமுடியும். அது என்னால் இனியும் இயலாது.

ஜெயகாந்தன் அவர்களின் மகளின் திருமண அழைப்பிதழை ஒட்டி அவரும் பொதுவில் சொல்லாத, இசைஞானியும் பொதுவில் சொல்லாத விஷயத்தை அறச்சீற்றம் என்று பெரும் பூடகமாக நுட்பமாகப்பகிர்ந்தீர்கள். அதே பத்திரிகையில் இசைஞானியின் கேள்வி பதிலும் வந்தது.
அவர் உங்களை மறைமுகமாகவேனும் குத்திக்காட்டியிருப்பாரா? நீங்கள் இருக்குமிடத்தில் நான் இருக்கமாட்டேன் என்று சொன்னார். அதை திரை மறைவு நாடகமாக சொல்லவில்லை.
வேறு ஒருவர் மூலம் நிகழ்த்தவில்லை. அது தான் கலைஞனின் வெளிப்படைத்தன்மை.
அது தான் சத்தியம் என உள்ளுறை தெய்வம்.
நாத்தீகத்திற்கும் அந்த தெய்வத்தின் அருள் கண்டிப்பாக வேண்டும்.
அது இல்லாது போகப்போக உங்கள் தமிழ்ப்பால் திரிந்து போன வாசனை அதிகமாக வருகிறது.
அது உங்கள் பாடல் வரிகளிலும் தெரிகிறது.
உங்களை நீங்கள் மீட்டுக்கொள்ள, உங்கள் தமிழை மீட்டுக்கொள்ள
தயவு செய்து இந்த மாய்மாலங்களை விட்டுவிடுங்கள்.
அல்லது நான் முழு நேர அரசியல்வாதியென்று அறிவித்துவிடுங்கள்.
நானும் வைரமுத்து என்ற முன்னாள் கவிஞரின் நினைவைப்போற்றிக்கொண்டு இருப்பேன்.

Posted in film songs, thamizh | Tagged , , , | பின்னூட்டமொன்றை இடுக

viswaroopam – global terror, indian hero

Kamal hassan’s Viswaroopam is a neatly made espionage thriller with the cliched save new york plot to culminate.
From a plot angle it is more close to “The Traitor” starring Don Cheadle http://en.wikipedia.org/wiki/Traitor_(film) .
The husband wife drama is more of an extended first act that soon withers off thankfully. The meat of the movie is the
scenes in Afghanisthan which is the “middle act”. And true to hitchcockian rules of middle act what is shown is only the
“need to know” or the stuff that will affect the third act – which is the “save the city from terror”. The middle act is
juicy and could have been expanded further – but would have gotten kamal into more trouble because the true reason
and meaning of Jihad would have to be explored and explained – much like Hey Ram – at the risk of making an action
thriller more verbose and preachy. Kamal chooses wisely to leave it because to understand the true spiritual meaning
of Jihad – is beyond a person who thinks in ‘absolutes’ which unfortunately most atheists are. However it is a missed opportunity nevertheless.
Having said that – the Afghanisthan episodes are the “motives” for the antagonist and in that way, make us in a small way
empathize with the antagonist and his group which most of the hollywood spy thrillers dont do well enough.
Without discussing the plot any further (which we will after the movie gets released in TN), the astute director Kamal, the clever scene manipulator is on display in every frame. He inserts “oil price rise” through a stock quote ticker beneath the footage of Obama praising the fall of Bin Laden.
Having said that one has to see the portrayal of all “guilty” parties in balance – in this regard, while USA’s actions are mildly chided (as opposed to full blooded codemnation – like in the movie Syriana), the islamic jihad(the false jihad of al qaeda) is painted in one broad stroke. The only innocent muslims in the movie are children and women. No rational muslim to provide balance – like Amjad(There is one good muslim who fights against Omar – but I leave that one for the guys watching the movie to figure it out) in Hey Ram. This is what is causing all the trouble for kamal – there are a whole bunch of jihadis who are ready to face extreme pain only because their leader is out to avenge his personal loss – This is simplifying the whole myriad of issues into a simple comfortable equation. This works for action movie lovers. The transformation of effeminate dance teacher into a glorious RAW agent is indeed exhilirating for kamal fans and others – however the afghanisthan angle which is juicy outside eventually is a subject that needed pensive and careful prodding and exploration and extreme care. So net and net – Kamal the writer’s triumph is the loss for Kamal the producer and these sequences were the most delightful exhibition of Kamal the actor too.
From acting perspective – While Kamal dominates expectedly – Rahul Bose contrary to his diminutive physique manages to create quite a persona and aura around Omar – the pashtun leader in Afghan – Pakistan border. The actor who plays Salim – Omar’s brother is awesome too.
Shekar Kapur’s unfussed, understated presence as Col.Jagannath – is graceful and the scene where he reaches for Nitroglycyrene – is quite special.
Pooja Kumar is the comedy in charge of the movie and carries her role with a grace that most of the Indian heroines simply plainly lack.
And what was Andrea doing in the movie – I thought it was the most underdeveloped role in the whole movie and therefore she appears quite lacklustre.
While the movie offers no simple solutions it underlines quite a complex problem in a relatively realistic manner and this is so beautifully brought out by one small scene (when a person by name “Imtiaz” is encountered by Kamal’s character in Afghanisthan) . But the genre blunts such poignant scenes and what one comes out with is whole world (super power USA and our India) versus the muslims and that is rather uncomfortable to watch if you are an average movie going muslim. So in a way the groups feeling sore have some justification on their side.
All said and done, kamal’s viswaroopam rightfully deserves to be counted amongst notable and riveting action thrillers on the subject of global terrorism worldwide. For thamizh films, that is a first strike and kudos to kamal for that.

Posted in movies | Tagged , , | பின்னூட்டமொன்றை இடுக

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

Posted in Uncategorized | 1 பின்னூட்டம்